Latestமலேசியா

வட்டி முதலை & மீள முடியாத கடன் நெருக்கடியா? தீர்வுக்கு உடனே அணுகுங்கள் Satria Bersepadu சேவை மையம்

வட்டி முதலை & மீள முடியாத கடன் நெருக்கடியா? தீர்வுக்கு உடனே அணுகுங்கள் Satria Bersepadu சேவை மையம்

சிரம்பான், பிப்ரவரி-11,

சிரம்பான் 2-வில் இயங்கி வரும் ஓர் அரசு சார்பற்ற அமைப்புதான் Pertubuhan Kebajikan Satria Bersepadu Negeri Sembilan

‘Amanah, Cekap, Tegas’ என்ற கோட்பாட்டுடன், இந்த அமைப்பு, அதிகப்படியான வட்டி கடன், Ahlong எனப்படும் வட்டி முதலைகள் அல்லது உரிமம் பெற்ற கடன் நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு சிக்கியிருக்கும் மக்களுக்கு ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

மக்களின் வாழ்க்கையை சுமையற்றதாக மாற்றி, நிதி சுதந்திரத்தை அவர்கள் மீண்டும் பெற உதவுவதே தங்களின் நோக்கம் என்கிறார் Satria Bersepadu தலைவர் டேனியல்…

 

தீராத கடன் தொல்லை மற்றும் சட்டவிரோத வட்டியில் நம் மக்கள் சிக்கியிருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் எண்ணத்தில்தான் இவர்கள் 2024-ஆம் ஆண்டில் இந்த அமைப்பைத் தொடங்கினார்.

சங்க பதிவிலாகாவான ROS-சிடம் முறைப்படி பதிவுப் பெற்ற இவ்வமைப்பில் தற்போது ஐவர் உறுப்பினர்களாக இருந்து வழிநடத்துகின்றனர்.

தங்களிடம் ஆலோசனை மற்றும் உதவித் தேடி வருவோரில் அவசர தேவைக்கு அதிக வட்டிக்குக் கடன் வாங்கியவர்களே அதிகம் என்கிறார் டேனியல்.

 

செலவுபோக சம்பளத்தை சேமிக்கத் தவறியவர்கள், ஆபத்து அவசர சமயங்களில் என்ன செய்வதென தெரியாமல் அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் வேளை, சிலர் வட்டி முதலைகளிடம் செல்கின்றனர்.

இவர்களில் திருமணத்திற்காக வட்டிக்குக் பணம் வாங்கி சிக்கிக் கொண்டவர்களும் உண்டு; இதனால் பலர் திருமண வாழ்க்கையை கடனாளிகளாகத் தொடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

 

இதுபோன்ற கடன் பிரச்னைகளில் 25 முதல் 40 வயதிலானவர்களே பெரும்பாலும் விழுந்து விடுகின்றனர்.

இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு, வட்டிக் குறைப்பு, மற்றும் பேச்சுவார்த்தை வழியாக அவர்களின் நிதிச் சுமையை குறைக்க Satria Bersepadu அமைப்பினர் உதவுகின்றனர்.

இவ்வேளையில், அவசரத் தேவை அல்லது நிதி நெருக்கடி வரும்போது சரியாக யோசிக்காமல் செயல்படுவதே கடன் வாங்குவர்கள் செய்யும் முதன்மைத் தவறு என இவ்வமைப்பைச் சேர்ந்த ஜஸ்டின் கூறுகிறார்.

 

திரைப்படங்களில் பார்ப்பது போல், படிக்காமல் வெற்று காகிதத்தில் கையெழுத்து போட்டு அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சம்பவங்கள் இங்கும் நடக்கவே செய்கின்றன.

 

ஆரம்பத்திலேயே ஆலோசனைக்குத் தேடி வந்தால் தீர்வு கொடுக்கலாம்; பெரியப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்; ஆனால் அதற்கும் பலர் தயங்குகின்றனர்.

உதவி என்ற பெயரில் ஒருவேளை மோசடியாக இருக்குமோ என்ற பயமும் அதற்குக் காரணம் என்கிறார் ஜஸ்டின்..

 

18 வருடமாக ஒரே ஆளிடம் திரும்ப திரும்ப வட்டிக்கு கடன் வாங்கி, கடும் நெருக்கடியில் சிக்கிய ஒரு நடுத்தர வயது தம்பதியின் கதையும் இவர்கள் பகிர்ந்து கொண்டன.

 

அதிகப்படியான வட்டி, வட்டி முதலைகளின் தொல்லைகள் போன்ற பிரச்னைகளில் இருந்து நம் சமுதாயத்தை மீட்பதே இவர்களின் நோக்கம்.

உதவி தேவை படுபவர்கள் Tiktok அல்லது Instagram வாயிலாக Satria Bersepadu அமைப்பை தொடர்பு கொள்ளலாம் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!