கோலாலம்பூர், ஏப் 15- மலாக்கா, மஸ்ஜிட் தானாவில் பேராங்காடியில் கார் நிறுத்துமிடம் தொடர்பாக மற்றொரு மூத்த குடிமகனுடன் ஏற்பட்ட தகராறில் 82 வயது முதியவர் ஒருவர் தள்ளப்பட்டதில் அவரது முதுகெலும்பு முறிந்தது.
பிப்ரவரி 4 ஆம் தேதி நடந்த அந்த சம்பவம் தொடர்பாக 65 வயதான சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் தடுத்து வைக்கப்பட்டதாக
அலோர் காஜா போலீஸ் தலைவர் அஷாரி அபு சாமா (Ashari Abu ) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் சந்தேக நபருடன் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக வாக்குவாதம் செய்ததாகவும், பின்னர் அவரை தள்ளிவிட்டதாகவும், இதனால் அவர் சாலையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவரின் முதுகெலும்பு முறிந்தது என அஷாரி தெரிவித்தார். கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் 325ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.