Latestஉலகம்

வானில் அரிய காட்சி; பிப்ரவரி இறுதியில் ஒரே வரிசையில் நான்கு கிரகங்கள்

வாஷிங்டன், பிப்-6-பிப்ரவரி மாத இறுதியில், சூரிய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு கிரகங்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரே வரிசையில் தோன்றும் அபூர்வ வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு ‘கிரகப் பேரணி’ என அழைக்கப்படுகிறது.

இந்த காலக்கட்டத்தில் புதன், சுக்கிரன், சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களை மாலை நேரத்தில் வானில் காண முடியும். இதில் சனி, சுக்கிரன் மற்றும் புதன் ஒன்றுக்கொன்று அருகில் தோன்றும் நிலையில், வியாழன் கிரகம் சந்திரனின் அருகில் அதிக பிரகாசத்துடன் காணப்படவுள்ளது.

ஆனால் Uranus மற்றும் Neptun கிரகங்கள் மங்கலான ஒளியுடன் இருப்பதால், அவற்றை கண்களால் நேரடியாகக் காண முடியாது என்றும் அவற்றைப் பார்க்க தொலைநோக்கி அல்லது இரட்டை கண்ணாடி தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் NASA, அனைத்து கிரகங்களும் ‘எக்ளிப்டிக்’ எனப்படும் ஒரே பாதையில் சூரியனைச் சுற்றி பயணம் செய்வதால், இவ்வாறு அவை வானில் ஒரே கோட்டில் தோன்றுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்வு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடைபெறும் அரிய சம்பவம் அல்ல என்றும் நாசா விளக்கியுள்ளது.

பிப்ரவரியைத் தொடர்ந்து, சனி கிரகம் வானில் தாழ்வாகத் தோன்றுவதால், இந்த நான்கு கிரகங்களின் வரிசை மெதுவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!