Latestஇந்தியா

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு; இரசிகர்கள் உற்சாகம்

புது டெல்லி, ஜனவரி-23- நடிகர் விஜயின் TVK எனப்படும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

கேட்ட சின்னமே கிடைத்திருப்பதால், ‘இது எங்கள் முதல் வெற்றி’ என விஜய் கூறியுள்ளார்.

_”விசில், நல்லவர்கள் சின்னம்…நாடு காப்பவர்கள் சின்னம்…ஊழலை ஒழிக்கும் சின்னம்…”_ என்றார் அவர்.

_”ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்…வெற்றிச் சின்னம் விசில்…சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்…விசில் போடுவோம்”_ என X தளத்தில் விஜய் குறிப்பிட்டார்.

இந்த விசில் சின்னம் வெறும் அடையாளம் அல்ல விஜய் இரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த சின்னமாகும்.

விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் ‘விசில்’ என பிரபலமானதால், இளைஞர்களிடையே உற்சாகம், வெற்றி, நீதி ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இரசிகர்கள் சமூக ஊடகங்களில் உற்சாகமாகக் கொண்டாடி, ‘விசில்’ சின்னம் TVK அரசியல் பயணத்தின் சக்திவாய்ந்த தொடக்கம் எனக் கூறுகின்றனர்.

கட்சி நிர்வாகிகளும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் விசில் சின்னத்தை கொண்டாடி வருகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!