ஃபுளோரிடா, அக்டோபர் -15, சூரியக் குடும்பத்தின் மிகப் பெரியக் கோளான ஜூப்பிட்டர் எனப்படும் வியாழன் கிரகத்தைத் சுற்றி வரும் ‘யுரோப்பா’ நிலவுக்கு, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா விண்கலத்தை அனுப்பியுள்ளது.
‘யுரோப்பா’ நிலவில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக, Europa Clipper என்ற அந்த விண்கலம் பாய்ச்சப்பட்டுள்ளது.
சுமார் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து Space X நிறுவனத்தின் Falcon Heavy ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
சூரிய சக்தியில் இயங்கும் அவ்விண்கலம், 2.9 பில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணித்து 2030-ஆம் ஆண்டில் ‘யுரோப்பா’ நிலவின் சுற்றுப்பாதையை அடையும்.
வியாழன் கிரகத்தைச் சுற்றி வரும் 95 நிலவுகளில் இந்த ‘யுரோப்பா’ நிலவு நான்காவது மிகப் பெரிய நிலவாகும்.
இந்த ‘யுரோப்பா’ நிலவில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளுக்கு அடியில் மிகப்பெரிய உப்புத் தண்ணீர் கடல் உள்ளது.
அந்த தண்ணீரில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுவது குறிப்பிடத்தக்கது.