Latestமலேசியா

விளையாட்டு செய்தியாளர் Haresh Deol தாக்கப்பட்ட சம்பவம்; குற்றவாளிக்கு RM2,000 அபராதம்

கோலாலம்பூர், ஜனவரி 22 – கடந்த நவம்பர் மாதம் , விளையாட்டு செய்தியாளரான Haresh Deol மீது தாக்குதல் செய்த R. கிரிஷ்ணனுக்கு
நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.

அபராதம் செலுத்தப்படாவிட்டால் மூன்று மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்படுமென்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

நவம்பர் 25 ஆம் தேதியன்று பங்சார் Jalan Telawi-யில் கிரிஷ்ணனும் மற்றொரு நபரும் Haresh-ஐ தாக்கியுள்ளனர். அந்த சம்பவத்தை இன்னொரு நபர் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரேஷ் டீயோல், TwentyTwo13 என்ற இணைய செய்தி தளத்தை தொடங்கியவர்களில் ஒருவராவார். அவர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை சமூக ஊடகத்தில் முன்னதாக பதிவு செய்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!