
ஜோர்ஜ் டவுன் ,மார்ச் 20- VBM MOTORSPORTS கழக தலைவர் சரவணேஷ் தலைமையில் 90க்கும் மேற்பட்ட கழகங்களுடன் இணைந்து 700க்கும் மேற்பட்ட உயர்ரக இந்திய மோட்டார் சைக்கிளோட்டிகள் நிபோங் தெபால் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற
யூனிட்டி ரைட் எனப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் சவாரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் .
அண்மையில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் அவர்களால் ஈப்போ கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் இந்த நிகழ்ச்சி தொடக்கிவைக்கப்பட்டது.
பினாங்கு மாநிலத்தில் உள்ள பைராம் தோட்ட தமிழ்ப் பள்ளி (SJKT LADANG BYRAM) , செம்பா தோட்ட தமிழ்ப்பள்ளி (SJKT LADANG SEMPAH), ஜாவி தோட்ட தமிழ்ப் பள்ளி (SJKT LADANG JAWI) மற்றும் நிபோங் தெபால் தமிழ்ப் பள்ளி (SJKT NIBONG TEBAL) ஆகியவற்றிற்கு நன்கொடை திரட்டும் நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்வழி 2 பள்ளிகளுக்கான திடல் தட தினத்திற்காக தேவைப்படும் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சட்டைகள் வழங்கப்பட்டது. மேலும் மின்சாதன பொருட்கள், கணினிகள், பள்ளி மற்றும் கல்விக்கு தேவையான முக்கிய பொருட்களும் இந்த நிகழ்ச்சியில் ஒப்படைக்கப்பட்டன.
வசதி குறைந்த மற்றும் எஞ்சியுள்ள தோட்ட தமிழ் பள்ளிகளாகவும் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையை கொண்டிருந்ததால் இப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
இரண்டாவது முறையாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இதற்கு முன் ஜோகூர் மெர்சிங்கைச் சேர்ந்த காஹாங் பத்து தமிழ்ப்பள்ளி, குவந்தான் ஜெராம் தமிழ்ப் பள்ளி, மெந்தகாப் தமிழ்ப் பள்ளளி, பட்டர்வெர்த் CHUNG HUA சீனப்பள்ளி ஆகியவற்றுக்கும் (Pertubuhan Kebajikan Kesayangan Maha) என்ற ஆதரவற்ற இல்லத்திற்கும் நன்கொடை வழங்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



