Latestமலேசியா

வீடற்றவருக்கு எலும்புத் துண்டுகள் வழங்கப்படும் காணொளி வைரல் – எம். சி.எம்.சி விசாரணை

லஹாட் டத்து, ஆக 5 – செல்வாக்கு மிக்கவர்கள் என்று நம்பப்படும் தனிநபர்கள் குழு, வீடற்ற ஒருவருக்கு எலும்பு துண்டுகள் வழங்கப்பட்டதை காட்டும் வைரலான வீடியோ குறித்து MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மலிவான பொழுதுபோக்கு, பார்வையாளர்களை உருவாக்குதல் அல்லது அமைதியின்மையைத் தூண்டுதல் ஆகியவற்றிற்காக மட்டுமே ஓரங்கட்டப்பட்ட குழுக்களைச் சுரண்டும் உள்ளடக்கத்தை உருவாக்கி விநியோகிக்கும் செயல் நெறிமுறையற்றது மற்றும் மனிதாபிமானமற்றது என்று MCMC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தற்போதுள்ள சட்ட விதிகளின்படி விசாரணை நடந்து வருகிறது, மேலும் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு மிரட்டல் மற்றும் அச்சுறுத்தும் உள்ளடக்கம் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.

குற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டால், 500,000 ரிங்கிட்வரை அபராதம், கூடியபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பாகவும் , தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை MCMC மீண்டும் வலியுறுத்துகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!