
பத்து காஜா, ஆகஸ்ட் 13 – வீட்டில் நடக்கும் தீ விபத்துகளை கையாளத் தெரியாமல், அது பெரும் விபத்தாக மாறி அதனால் ஏற்படும் உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏராளம்.
இதுபோன்ற சூழலைத் தவிர்க்க, பேராக் பத்து காஜாவில் தீயணைப்பு துறையினரின் பட்டறை ஒன்று எதிர்வரும் ஆகஸ்டு 17ஆம் திகதி முழுக்க முழுக்க தமிழில் நடக்கவிருக்கிறது.
இந்த வாய்ப்பினை முக்கியமாக இந்திய சமூகத்தினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றார் பேராக் மாநில தீயணைப்பு பாதுகாப்பு பிரிவின் உதவி ஆணையர், ஹேமநாதன் சுப்ரமணியம்.
150 பார்வையாளர்களை எதிர்பார்த்து இந்நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை தெரிந்து கொள்வதன் வழி, மக்கள் எதிர்காலத்தில் வரும் பெரும் ஆபத்துகளிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள இயலும் என ஹேமநாதன் வலியுறுத்துகிறார்.