Latest
வெப்ப மண்டல புயல் எச்சரிக்கையை மெட் மலேசியா வெளியிட்டுள்ளது

கோலாலம்பூர், டிச 2- இன்று காலை 11 மணியளவில் வியட்நாமின்
டா நாங்கிலிருந்து ( Da Nang ) தென்கிழக்கே சுமார் 396 கிலோமீட்டர் தொலைவில் 14.7 வடக்கு மற்றும் 111.6 கிழக்கில் வெப்பமண்டல Koto புயல் எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா வெளியிட்டுள்ளது. புயல் மணிக்கு 65 கிலோமீட்டர் அதிகபட்ச காற்றின் வேகத்துடன் கிட்டத்தட்ட நிலையான நிலையில் நகர்ந்து வருவதாக மெட்மலேசியாவின் தேசிய வானிலை மற்றும் நிலநடுக்க செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் தூரம் சபாவின் குடாட்டிலிருந்து வடமேற்கே சுமார் 1,036 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனினும் இந்த நிலைமை மலேசியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



