Latestமலேசியா

வெளிநாட்டவர்கள் வேலை செய்து வந்த அழகியல் சிகிச்சை மையங்களில் சோதனை

ஷா ஆலாம், செப்-25-சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், சமூக ஊடகங்கள் மூலம் அழகுசார் சிகிச்சை சேவைகளை வழங்கியதாகக் கூறப்படும் மையங்கள் சோதனையிடப்பட்டன. ஷா ஆலாம், Pandan Perdana மற்றும் Kepong பகுதிகளில் நான்கு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ஒரு மாத காலமாகச் சேகரிக்கப்பட்ட உளவுத் தகவல்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் 19 முதல் 44 வயதுக்குட்பட்ட ஏழு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர். மற்ற அறுவர் பெண்கள்.

அவர்களிடமிருந்து மருந்துகள், மருத்துவ மற்றும் அழகுசாதனச் சிகிச்சை உபகரணங்கள், ஒரு கைபேசி, 400 ரிங்கிட் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக இந்தோனேசியர்களுக்கு, TikTok மற்றும் Instagram மூலம் சேவைகள் விளம்பரப்படுத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறை தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட மையங்கள் அச்சேவைகளை கடந்தாண்டு முதல் மேற்கொண்டு வந்ததாகவும், மாதம் 50,000 ரிங்கிட் வரை வருமானம் ஈட்டியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அதிகாரிகளின் கண்களில் படாமல் இருக்க வாடகை குடியிருப்புகளில் அச்சேவைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குடிநுழைவு சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்ராஜெயா குடிவரவு அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பதிவு செய்யப்படாத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் சுகாதார அமைச்சும் விசாரணை நடத்தவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!