கோலாலம்பூர், நவம்பர்-13 – வெளிநாட்டு தொழிலாளர் தருவிப்புக்கான கோட்டா ஒதுக்கீடு விண்ணப்பம் தொடர்பில், 1.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போலி ஆவணத்தைச் சமர்ப்பித்த சந்தேகத்தில், டத்தோ பட்டத்தைக் கொண்ட வங்காளதேசி கைதாகியுள்ளார்.
ஒரு நிறுவனத்தின் இயக்குநருமான அந்நபர், நேற்று முன்தினம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் கிளைக்கு வாக்குமூலம் அளிக்க வந்த போது கைதானார்.
இல்லாத இரு திட்டத்திற்காக 600 தொழிலாளர்களை உட்படுத்தி இரு கோட்டாக்களுக்கு அவர் விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.
முறையே 460,000 ரிங்கிட் மற்றும் 650,000 ரிங்கிட் லெவி கட்டணங்களை அவ்விரு விண்ணப்பங்களும் உட்படுத்தியுள்ளன.
40 வயது சந்தேக நபரை நவம்பர் 17 வரை தடுத்து வைத்து விசாரிக்க MACC-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.