
கோலாலம்பூர், செப் 17 – கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் நிலையற்ற வானிலை வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எதிர்பார்க்கிறது. அதன்பிறகு நாட்டின் பல வட்டாரங்களில் ஈரப்பதம் குறையும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியாவின் ஆய்வின் மூலம் தெரியவருவதாக அதன் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் (Dr Mohd Hisham Mohd Anip ) தெரிவித்தார்.
மேற்கு Pasifik பெருங்கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல் அமைப்பு, ஈரமான காற்றின் செறிவை இந்தப் பகுதிக்கு ஈர்க்கும். இந்த நேரத்தில் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் புயல் அல்லது வெப்பமண்டல புயல் போன்ற குறைந்த அழுத்த அமைப்பு எதுவும் இல்லை.
இதனால் நாட்டில் ஈரப்பதம் குவிந்து மேற்கு நோக்கி காற்று வீசுகிறது. இந்த சூழ்நிலை காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக முகமட் ஹிஷாம் கூறினார்.
மலேசியா இன்னும் தென்மேற்கு பருவமழை கட்டத்தில் இருப்பதால், இந்த நிகழ்வு பருவமழை மாற்றத்துடன் தொடர்புடையது அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.
இது மே மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி செப்டம்பர் மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் இருந்து மார்ச் வரை தொடங்கும் வடகிழக்கு பருவமழைக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நாடு பருவமழை மாறக்கூடிய கட்டத்தில் நுழையும் என்று அவர் கூறினார்.