ஷா அலாம், ஜன 9 – ஷா அலாமிற்கு அருகே Bandar Saujan Putra விலுள்ள nursery எனப்படும் பராமரிப்பு மையத்தில் 4 மாத ஆண் குழந்தை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இறந்ததாக நம்பப்படுகிறது. அந்த பராமரிப்பு மையத்தின் பராமரிப்பாளர் ஜனவரி 3 ஆம் தேதியன்று மாலை மணி 3.29 அளவில் பண்டார் சவ்ஜனா புத்ராவிலுள்ள கிளிக்கிற்கு சுயநினைவற்ற நிலையில் அந்த குழந்தையை கொண்டுவந்ததாக அந்த கிளினிக்கின் மருத்துவரிமிருந்து
போலீஸ் புகாரை பெற்றதாக கோலாலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட்
அக்மால்ரிசால் ரட்ஷி ( Mohd Akmalrizal Radzi ) தெரிவித்தார்.
அந்த குழந்தையின் உதடுகள் நீல நிறமாகவும் அதன் கால் பாதங்கள் வெளிர் நிறமாக காணப்பட்டதோடு அக்குழந்தை சுவாசித்ததற்கான அறிகுறியையும் கொண்டிருக்கவில்லை. குழந்தையை புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்சுக்காக காத்திருந்தபோது அந்த மருத்துவர் உடனடியாக 30 நிமிடங்களுக்கு சி.பிஆர் முதலுதவி செய்து ஆக்சிஜன் வழங்கியபோதிலும் அக்குழந்தை இறந்துவிட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. அந்த குழந்தையின் மரணம் தொடர்பில் சிறார் சட்டத்தின் 31ஆவது பிரிவு (1) (a) யின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தை பரமாரிப்பு மையத்தின் நடத்துனர் மற்றும் அதன் ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையென முகமட் அக்மால்ரிசால் கூறினார்.