
ஷா ஆலாம், பிப்ரவரி-20-சிலாங்கூர், ஷா ஆலாமில் கத்தியேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பிப்ரவரி 16-ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணியளவில், செக்ஷன் 7, ஜாலான் பிளம்பும் (Jalan Plumbum) பகுதியில் நிகழ்ந்தது.
இந்தோனேசியப் பிரஜையான பெண் ஒருவர் குப்பை எறிய வெளியே சென்றபோது, சந்தேக நபர்கள் கத்தியால் மிரட்டி, அவரிடம் இருந்த 500 ரிங்கிட் பணம் மற்றும் தனிப்பட்ட பொருட்களை பறித்துச் சென்றனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட 5 ஆண்களும், ஒரு பெண்ணும் கைதாகினர்.
கொள்ளையில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.



