Latestமலேசியா

ஹரி ராயா: பள்ளிகளுக்கு மார்ச் 18-ல் கூடுதல் விடுமுறை

புத்ராஜெயா, மார்ச்-11-நோன்புப் பெருநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 18-ஆம் தேதி கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருநாளுக்குத் தயாராகவும், பயண நெரிசலைக் குறைப்பதற்கும் இந்த கூடுதல் விடுமுறை உதவும் என, கல்வி அமைச்சு கூறியது.

முன்னதாக, வெள்ளி-சனிக்கிழமைகளை வார இறுதி விடுமுறை நாட்களாகக் கொண்ட A பிரிவு மாநிலங்களான கெடா, கிளந்தான், திரங்கானு ஆகியவற்றுக்கு மார்ச் 19-ஆம் தேதி கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுவே சனி-ஞாயிற்றுக்கிழமைகளை வார இறுதி விடுமுறை நாட்களாகக் கொண்ட B பிரிவு மாநிலப் பள்ளிகளுக்கு மார்ச் 19, 20 என 2 நாட்களளுக்குக் கூடுதல் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஒரு நாள் முன்கூட்டியே பள்ளிகளுக்கு ஹரி ராயா விடுமுறை தொடங்குகிறது.

இவ்வாண்டுக்கான நோன்புப் பெருநாள் மார்ச் 20 அல்லது 21-ஆம் தேதி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!