ஜோகூர், நவம்பர் 21 – உலக அளவில் இயங்கி வரும் இஸ்கான் எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், சீனாய்யில் முதல் முறையாக ஸ்ரீ ஜகந்நாத் ரத யாத்திரையை ஏற்பாடுச் செய்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த யாத்திரை, கலை கலாச்சார நிகழ்ச்சிகளுடன் களைக்கட்டவுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 3 வரை, அரசு நிறுவனங்களின் கண்காட்சிகளுடன், மாலை 4 மணிக்கு ஜகம் போற்றும் ஜகந்நாதர் பக்தர்களுக்கு எழுந்தருளி ரத யாத்திரையில் ஊர்வலம் வரவிற்கிறார்.
அதனைத் தொடர்ந்து, இரவு 8 மணி முதல் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதாகக் கூறுகிறார் இஸ்கான் சீனாய் இயக்கத்தின் தலைவர் நகராஜு.
இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக ஜோகூர் பாரம்பரிய மற்றும் கலாச்சார ஒற்றுமை துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரவீன் குமார் கிருஷ்ணசாமி துவக்கி வைப்பார்.
பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.