
கோலாலம்பூர் – ஜூலை-25 – பங்சார், ஜாலான் தெலாவியில் நடைபாதையை மறைக்கும் அளவுக்கு உணவுண்ணும் மேசைகளையும் நாற்காலிகளையும் போட்டிருந்த 4 உணவகங்கள் மீது, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுமதியில்லாமல், பாதசாரிகளின் நடைபாதையை மறைக்கும் அச்செயல் ஏற்புடையதல்ல; இது பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் DBKL குறிப்பிட்டது.
எனவே விதிமீறலுக்காக அந்த 4 உணவகங்களுக்கும் அபராத நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அதோடு நடைப்பாதையில் போடப்பட்ட நாற்காலி மேசைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த அதிரடிச் சோதனைகள் தொடருமெனக் கூறிய DBKL, இது போன்ற சம்பவங்கள் குறித்து பொது மக்கள் Adu@KL என்ற இணைய அகப்பக்கத்தில் புகாரரளிக்கலாம் என்றது.