Latestமலேசியா

அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை முதலில் இடியுங்கள்; நான் போலிசில் சரணடைகிறேன் – தமிம் டாரி

கோலாலாம்பூர், மார்ச்-19-இந்து மதச் சின்னங்களை அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட ஏதுவாக போலீஸாரால் தேடப்படும் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், போலீசாரிடம் சரணடையத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் ஒரு நிபந்தனை வைத்துள்ளார்…

அதாவது, அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக பட்டியலிடப்பட்டுள்ள இந்து கோவில்கள் அனைத்தையும் அதிகாரிகள் இடித்தால் மட்டுமே, மலேசியாவிற்கு திரும்பி போலீசாரிடம் சரணடைவாராம்….

கோலாலாம்பூர் Jalan Pandanmas-சில் உள்ள ஒரு கோவில், பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள கோவில், சீஃபில்ட் பழைய கோவில் மற்றும் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள கோயில்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

மேற்கண்ட கோயில்களை இடித்தால், தானே தாயகம் திரும்பி போலீஸில் சரணடைவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு, அவரது சமூக ஊடக கணக்கான ‘Tanah Malaya’ வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் அனுமதியில்லாமல் கட்டப்பட கோவில்கள் குறித்த தகவல்களை சேகரிக்கவும் பகிரவும் ஏதுவாக தமிழ் அமைத்த குழுதான் இந்த Tanah Malaya ஆகும்.

நேற்று முந்தினமே, சம்ரி வினோத் உள்ளிட்ட மூவருடன் தமிழ் டாஹ்ரியும் மத அவமதிப்புக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்திருக்க வேண்டும்.

ஆனால், அவர் சவூதி அரேபியாவின் மடினாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து தாயகம் கொண்டுவர போலீஸ் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தேசியப் போலீஸ் படைத் தலைவரும் கூறியுள்ளார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!