Latestமலேசியா

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ; இறந்த சிறுமி சவப்பெட்டிக்குள் கண்விழிப்பு

அமெரிக்கா, அக்டோபர் 13 – மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் (Guatemala), இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட சிறுமி ஒருவர், இறுதி அஞ்சலி நிகழ்வின்போது சவப்பெட்டிக்குள் திடீரென கண்விழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்தச் சிறுமி உடல்நலக் குறைவால் மயக்கமடைந்த போது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சுவாசமும் நாடித்துடிப்பும் இல்லாததால் அவர் இறந்துவிட்டதாக அவரது தந்தை கருதியுள்ளார். ஆனால், அவரது மரணத்தை மருத்துவர் உறுதிப்படுத்தவில்லை.

வீட்டில் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றபோது, சிறுமியின் தாயார், மகள் அசைவதைக் கவனித்தார். பின்னர் கண்விழித்த சிறுமியை அங்கிருந்தவர்கள் சவப்பெட்டியிலிருந்து வெளியே எடுத்து தண்ணீர் வழங்கினர்.

தனது மார்பில் கடுமையான வலியும் பாரமும் ஏற்பட்டதைத் தொடர்ந்து மயக்கமடைந்ததாகச் சிறுமி தெரிவித்தார். எனினும், அவர் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டதற்கான காரணம் குறித்து குவாத்தமாலா சுகாதார அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!