கலிஃபோர்னியா, டிசம்பர்-15,அமெரிக்காவின் வட கலிஃபோர்னியாவில் கைத்துப்பாக்கியை 2 வயது சிறுவன் வைத்து விளையாடியதில், தோட்டா பாய்ந்து அவனது தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிருள்ள தோட்டா போடப்பட்ட கைத்துப்பாக்கி படுக்கையறையில் கவனிப்பாரின்றி கிடந்த நிலையில், அது சிறுவன் கண்ணில் பட்டது.
அதை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் அதன் விசையை அழுத்த, மெத்தையில் படுத்திருந்த தாயின் மீது தோட்டா பாய்ந்தது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
Jessinya Mina எனும் அம்மாது சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
அது Jessinya Mina-வின் காதலர் Andrew Sanchez-க்குச் சொந்தமான துப்பாக்கியாகும்.
இந்நிலையில் சிறார்கள் கைக்கு எட்டிய தூரம் சுடும் ஆயுதத்தை வைத்தன் பேரில் Andrew கைதாகி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பெற்றோரின் கவனக்குறைவால் ஓர் உயிரே போயிருப்பதாகக் கூறிய போலீஸ், சுடும் ஆயுதங்களை முறையாகக் கையாள்வது மற்றும் பாதுகாப்பான இடத்தில் வைப்பதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியிருப்பதாகத் தெரிவித்தது.