Latestமலேசியா

அம்பாங் ஜெயா, தாமான் லெம்பா மாஜுவில் நிலச்சரிவு; ஆற்றங்கரையில் விழும் அளவுக்குச் சென்று விட்ட pickup லாரியும் காரும்

அம்பாங் ஜெயா, அக்டோபர்-13,

அம்பாங் ஜெயா, தாமான் லெம்பா மாஜுவில் சனிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இரு வாகனங்கள் சேதமடைந்தன.

இரவு 7 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 10 மீட்டர் ஆழத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் ஒரு pickup லாரியும், ஒரு புரோட்டோன் வீரா காரும் ஏறக்குறைய ஆற்றங்கரையில் விழும் அளவுக்குப் போய் விட்டன.

நல்லவேளையாக எவருக்கும் அதில் காயமேற்படவில்லை எனத்  தீயணைப்பு-மீட்புத் துறை உறுதிப்படுத்தியது.

அந்த pickup லாரி சரிந்த மண்ணில் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படங்கள் முன்னதாக வைரலாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!