Latestமலேசியா

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் புகைப்பிடித்த அதிகாரிக்கு காரணம் கோரும் கடிதம்

கோலாலம்பூர் , செப் -23,

சிலாங்கூர் மாநில அரசுத் துறையின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் புகைபிடிப்பதை படம்பிடித்த அதிகாரி ஒருவருக்கு, அவரது நடத்தைக்கு எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க காரணம் கோரும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில செயலாளர் நிர்வாகத்திற்கு இன்று ஒரு அறிக்கை மூலம் இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் அந்த அதிகாரிக்கு காரணம் கோரும் கடிதம் வழங்கியபோது இது தொடர்பான தொடக்கக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒவ்வொரு அரசு ஊழியரும் பொது சேவையின் நெறிமுறையை ப் பராமரிக்க வேண்டும் என்றும், மாநில அரசின் அதிகாரப்பூர்வ சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் உட்பட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று சிலாங்கூர் அரசு வலியுறுத்தியது

ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மட்டுமல்லாமல், 1993 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் (நடத்தை மற்றும் கட்டொழுங்கு ) விதிமுறைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நேர்மை மற்றும் பொதுப் பொறுப்பின் மதிப்புகளுக்கு எதிரானது. விதிகளை மீறுவது ஏற்கனவே உள்ள கட்டொழுங்கு நடவடிக்கை மூலம் கையாளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில அரசுத் துறையின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் அரசு ஊழியர் ஒருவர் புகைபிடிப்பதைக் காட்டும் புகைப்படம் நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!