
கோலாலம்பூர், ஏப் 30 – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கம்போங் சுங்கை பெஞ்சலாவில் தனது பெற்றோரைக் கொலை செய்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட வேலையில்லாத ஆடவன் ஒருவன் அந்தக் குற்றத்தைச் செய்தபோது சுயசிந்தனையுடன் இருந்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
பேராக்கில் உள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில் இவ்வாண்டு பிப்ரவரி 7ஆம் தேதியிடப்பட்ட தேதியிட்ட மனநல பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில்,
44 வயதான முகமது அலி @ எப்பெண்டி முகமது அகுஸிற்கு (Afendi Muhammad Agus) மனநோய் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் இஷாலினா அப்துல்லா ( Izalina Abdullah ) உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டியிடம் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சம்பவம் நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் நல்ல மன நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் அவரது செயல்களின் தன்மை மற்றும் விளைவுகள் குறித்து அவருக்குத் தெரியும் என்பதோடு அந்தச் செயல்கள் தவறானவை மற்றும் சட்டத்திற்கு எதிரானவை என்பதை அறிந்து கொள்ளும் திறன் அவருக்கு இருந்தது என்றும் இஷாலினா சுட்டிக்காட்டினார்.
இந்த அறிக்கை எழுதப்பட்ட தேதியில் குற்றம் சாட்டப்பட்டவரின் மனநிலை சீராக இருந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு தகுதியானவர் மற்றும் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளக்கூடியவர் என்று இன்றைய வழக்கு விசாரணையின் போது இசலினா தெரிவித்தார்.
இதனிடையே குற்றஞ்சாட்டப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு தீர்ப்பு வழங்க மே 20ஆம் தேதியை நீதிபதி முனியாண்டி நிர்ணயித்தார்