Latestமலேசியா

அரச அருங்காட்சியகம் 2027 பிப்ரவரி 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது

புத்ராஜெயா, செப்டம்பர்-10-கோலாலம்பூரில் உள்ள அரச அருங்காட்சியகம் அடுத்தாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் திட்டமிட்ட கால அட்டவணைப்படி நடைபெறுவதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.

                  

               

அரச அருங்காட்சியக கட்டிடத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் 2025 டிசம்பர் 15 ஆம் தேதி நிறைவடைந்தன. உள் அலங்காரம் மற்றும் காட்சியமைப்பு மேம்பாட்டுப் பணிகள் 2026 ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கின. அவற்றை அடுத்தாண்டு ஜனவரி 28ஆம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

                       

                   

பழைய Istana Negaraவில் அமைந்துள்ள அரச அருங்காட்சியகம், 2007ஆம் ஆண்டு தேசிய பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது. அதில் அரசக் காட்சியகம் மற்றும் அரசவை மண்டபம் ஆகிய இரு முக்கியப் பகுதிகள் உள்ளன. அரசக் காட்சியகத்தில், முதலாவது முதல் 13ஆவது யாங் டி-பெர்துவான் அகோங் மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் ஆகியோரின் அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டு அறைகள் இருக்கின்றன. அரசவை மண்டபம், பதவியேற்பு விழாக்கள், பிரதமர் நியமனம், கூட்டரசு விருது வழங்கும் நிகழ்வுகள் உள்ளிட்ட முக்கிய தேசிய நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

                     

அரச அருங்காட்சியகம் நாட்டின் வரலாற்றுப் பொக்கிஷமாகவும் கல்வித் தளமாகவும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என Aaron Ago Dagang கூறினார். மலேசிய அரச வரலாற்றை தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள அருங்காட்சியகம் முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!