![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/MixCollage-22-Sep-2024-08-41-AM-3695.jpg)
லூமூட், செப்டம்பர் -22, தேசிய உயர் கல்வி நிதிக்கழகமான PTPTN, இதுவரை அறவே கடனைத் திருப்பிச் செலுத்தாத 430,000 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.
அவர்கள் வைத்துள்ள கடன் பாக்கி மட்டும் 600 கோடி ரிங்கிட் என உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாம்ரி அப்துல் காடீர் (Zambry Abd Kadir) தெரிவித்தார்.
அவர்களின் பொறுப்பற்றச் செயலால் PTPTN-னின் நிதி நிலைமை அபாயத்திலிருப்பதாக அவர் சொன்னார்.
கடன் பாக்கி வைத்துள்ளோரில் சிலர் மேற்படிப்பு முடித்து சில தசாப்தங்கள் ஆகி விட்டன;
ஆனால் இன்றைய தேதி வரையில் ஒரு சென் கூட அவர்கள் திருப்பிச் செலுத்தவில்லை
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கினால் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தாலும் கண்டுகொள்வதில்லை என அமைச்சர் ஏமாற்றத்துடன் கூறினார்.
இவ்விவகாரம் அமைச்சரவை அளவில் ஆழமாக விவாதிக்கப்பட்டு விட்டது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை என சாம்ரி கூறினார்.