
கோலாலம்பூர், அக்டோபர்-6,
தனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி போலி ஃபேஸ்புக் கணக்கை உருவாக்கி, “Bee Venom Joint Healing Cream” எனும் மூட்டு வலி நிவாரண கிரீமை விளம்பரம் செய்தவர்களுக்கு எதிராக, சுகாதாரத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ Dr நூர் ஹிஷாம் அப்துல்லா,
சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
“Tan Sri DrNoor HishamAbdullah” என்ற பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்கின் screenshot படத்தை நேற்றைய ஃபேஸ்புக் பதிவில் அவர் பகிர்ந்தார்.
அதில், AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அவரது போலியான புகைப்படங்கள், விளம்பரப்படுத்தப்பட்ட கிரீமோடு இணைக்கப்பட்டிருந்தன.
அப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக இருப்பதால் பலர் ஏமாற்றப்படுகின்றனர்; இது முற்றிலும் தவறானது என்பதால் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற தவறான தகவல்களில் நம்ப வேண்டாம் என்றும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளை ஒன்றுக்கு பலமுறை சரிபார்க்குமாறும் பொது மக்களை அவர் அறிவுறுத்தினார்.