Latestமலேசியா

உலகளவில் வளர்ந்து வரும் 30 முன்னோக்குச் சிந்தனையாளர்கள் பட்டியலில் நூருல் இசாவின் பெயர்

கோலாலம்பூர், ஏப்ரல்-23- பி.கே.ஆர் கட்சியின் இணை நிறுவனரும் அதன் நடப்பு உதவித் தலைவருமான நூருல் இசா அன்வார், உலகளவில் 30 செல்வாக்குமிக்க முன்னோக்குச் சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

அந்த 30 பேரில், Yale பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் Marina Halac, Harvard பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் Oleg Itskhoki, Oxford பல்கலைக்கழக பொது மற்றும் அரசாங்கக் கொள்கை பேராசிரியர் Yeling Tan உள்ளிட்டோரும் அடங்குவர்.

கல்வி, கொள்கை இயற்றல், சிவில் சமூக மற்றும் தனியார் துறைகளில் வளர்ந்து வரும் அறிவார்ந்தவர்களை அங்கீகரிக்கும் வகையில், இலாப நோக்கமற்ற உலகலாய ஊடக அமைப்பான Project Syndicate அப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் தொடங்கி புவிசார் அரசியல், தாராளவாத ஜனநாயகம், முதலாளித்துவத்தின் எதிர்காலம் வரை பல்வேறு முக்கியப் பிரச்னைகளில் அவர்கள் குரல் கொடுத்து வருகின்றர்.

அவர்களின் கருத்துகள் சொந்த நாட்டில் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதோடு, அரசியல் விவாதங்களில் விமர்சன சிந்தனையை முன்னிலைப்படுத்தக் கூடிய ஆற்றலை அவர்கள் கொண்டுள்ளதாக Project Syndicate கூறியது.

1990-ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இந்த Project Syndicate அமைப்பானது, பல்வேறு அனைத்துலக விவகாரங்கள் குறித்து கருத்துகளையும் ஆய்வறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!