கோலாலம்பூர், ஜனவரி 2 – டிசம்பர் 28 மற்றும் 29, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ‘காதல்’ கருப்பொருளில் ஆஸ்ட்ரோவின் பிரத்தியேக உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டியான ஆட்டத்தின் ஏழாம் மற்றும் எட்டாம் அத்தியாயங்கள் முதல் ஒளிபரப்புக் கண்டன.
மாபெரும் வெற்றியாளராக முடிசூடுவதற்கான வாய்ப்பிற்காக 10 அணிகளுக்கு இடையேக் கடுமையானப் போட்டிக்குப் பிறகு, ஹரிஷ் நாதன் ஈஸ்வரன் தலைமையிலான மில்லினியம் ஆர்ட்ஸ் 03 மதிப்பெண்களுடன் வாரத்திற்கான மதிப்பெண் பட்டியலில் முன்னணி வகிக்கிறது.
இதற்கிடையில், ‘காதல் சடுகுடு’ பாடலுக்கு நடனமாடிய ரியானா ஆர்ட்ஸின் பயணம் 44.09 மதிப்பெண்களுடன் முடிவுக்கு வந்தது.
சிறந்த 9 அணிகளின் விபரங்கள் பின்வருமாறு:
பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் இணையப் பகடிவதை ஆகியவற்றிக்குக் குரல் கொடுப்பவராகவும் நடிகை, செய்தி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் பிரிதா மணிவண்ணன் விருந்தினர் நீதிபதியாகப் பிற நீதிபதிகளான நடனக் கலைஞர், நடன இயக்குனர், மற்றும் நடிகர் எம்.ஜே. நாடா; தொகுப்பாளர், நடனக் கலைஞர், உள்ளூர் நடனப் பள்ளியின் இணை நிறுவனர் மட்டும்மல்லாது ஆட்டம் 100 வகையின் தொகுப்பாளருமான, அருணா; மற்றும் சிங்கப்பூரின் நடனக் கலைஞர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் மற்றும் ஆட்டம் 100 வகை சீசன் 3-இன் வெற்றியாளர்களில் ஒருவரான ராமேஸ்வரா ஆகியோருடன் கைக்கோர்த்தார்.
ஆட்டம் போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்:
- முதலாம் பரிசு: ரிம50,000.00
- இரண்டாம் பரிசு: ரிம25,000.00
- முன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம5,000.00;
- ஐந்தாம் மற்றும் ஆறாம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம2,000.00
ஆட்டம் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.
மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.