
நியூ சௌத் வேல்ஸ், அக்டோபர்-23 – ஆஸ்திரேலியாவின், நியூ சௌத் வேல்ஸ் மலைப்பகுதியில் தனது கைப்பேசியை எடுக்கும் முயற்சியில் 3 மீட்டர் பள்ளத்தில் தவறி விழுந்த பெண், 7 மணி நேரங்களுக்கு பெரியக் கற்பாறைகளுக்கிடையே சிக்கிக் கொண்டார்.
பாறைகளின் இடுக்கில் தலைக் கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தவரை விடுவிக்க உடனிருந்த நண்பர்கள் முயன்று பார்த்து தோல்வியடைந்தனர்.
பிறகு மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு பாறைகளை நகர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு பாறையும் சுமார் 500 கிலோ கிராம் எடையிலிருந்ததால் மீட்புக் குழுவின் திக்குமுக்காடிப் போயினர்.
கடும் போராட்டத்திற்குப் பிறகு சிறப்புக் கருவிகளின் உதவியுடன் 500 கிலோ பாறையை நகர்த்தி, அப்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக அப்பெண்ணுக்கு சிறிய கீறல்களும் காயங்களும் மட்டுமே ஏற்பட்டிருந்தன.
ஆனால் எந்த கைப்பேசிக்காக உயிரைப் பணையம் வைத்து பள்ளத்தில் விழுந்தாரோ, அந்த கைப்பேசி கடைசி வரை கிடைக்கவேயில்லை.