Latestமலேசியா

ஆயர் கெரோ ‘பூத்திக்’ கடையில் திருட்டு; மெக்கானிக் மீது குற்றச்சாட்டு

ஆயர் கெரோ, மே 12 – மலாக்கா ஆயர் கெரோ (Ayer Keroh) AEON ஷாப்பிங் மாலில் உள்ள ‘பூத்திக்’ கடையிலிருந்து ஆடைகள் மற்றும் பெண்களின் உடைகள் உள்ளிட்ட பொருட்களைத் திருடிய 21 வயது ஆடவன் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது, சந்தேக ஆடவன் அக்குற்றத்தை மறுத்துள்ளான். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மொத்தம் 491 ரிங்கிட் மதிப்புள்ள 9 பொருட்களைத் திருடியதாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே நேரத்தில் நீதிமன்றம் 2,500 ரிங்கிட் ஜாமீன் தொகையில் சந்தேக நபரை விடுவித்ததோடு, இவ்வழக்கை ஜூன் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!