Latestமலேசியா

இணையத்தில் பாலியல் சேவைக்கு ஆசைப்பட்டு RM27,580 பணத்தைப் பறிகொடுத்த பொறியியலாளர்

கோலாலாம்பூர், ஏப்ரல்-21-இணையம் வாயிலாக பாலியல் சேவைக்கு ஆசைப்பட்ட 28 வயது பொறியியலாளர் ஒருவர், கடைசியில் மோசடியில் சிக்கி RM27,580 பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.

டிக் டோக்கில் வெளியான போலி பாலியல் சேவை விளம்பரத்தை நம்பியதால் அவருக்கு இந்நிலை என, பிரிக்ஃபீல்ஸ்ட் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Hoo Chang Hook கூறினார்.

பங்சாரைச் சேர்ந்த அவ்வாடவர், டிக் டோக்கில் வந்த ஒரு link இணைப்பைத் தட்டியபோது, வாட்சப் மூலம் சந்தேக நபருடன் தொடர்புகொண்டார்.

பாலியல் சேவைக்கான பேக்கேஜ்கள் மீது ஆர்வம் கொண்டவர், அதே வேகத்தில் கொடுக்கப்பட்ட 6 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 22 முறை பணத்தைச் செலுத்தினார்.

அதன் பின்னரும், இரத்து கட்டணம் உள்ளிட்ட பெயர்களில் தொடர்ந்து பணம் கேட்டு நச்சரிக்கப்பட்டதோடு, அவரை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதாக சந்தேக நபர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், மோசடிக்குள்ளானதை உணர்ந்த அவர் போலீஸில் புகாரளித்தார்.

இச்சம்பவம் மோசடிக் குற்றங்களுக்கான 420-ஆவது சட்டப் பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!