Latestமலேசியா

KK Mart கடைகளில் விற்கப்பட்ட ham and cheese சன்விட்ச் ரொட்டிகளில், பன்றி இறைச்சி கலக்கப்படவில்லை

கோலாலம்பூர், பிப்ரவரி-17 – KK Mart கடையில் விற்கப்பட்டு ஜனவரியில் சர்ச்சையான ham and cheese சன்விட்ச் ரொட்டிகளில், பன்றி இறைச்சி கலக்கப்படவில்லை.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN அதனை உறுதிப்படுத்தியது.

அந்த சன்விட்ச் ரொட்டிகளில் பன்றி மரபணு கண்டுபிடிக்கப்படவில்லை என, ஜனவரி 20-ஆம் தேதி பெறப்பட்ட ஆய்வுக் கூட சோதனை அறிக்கை தெரிவித்துள்ளதாக அமைச்சர் அர்மிசான் அலி கூறினார்.

என்றாலும், அந்த சன்விட்ச் தயாரிப்பு நிறுவனமும் அதன் இயக்குநரும் ஹலால் முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக 14 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

ஜனவரி 24-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டும் விட்டது.

அவ்விவகாரத்தில் தமதமைச்சு தாமதமாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது குறித்து கருத்துரைத்த போது அவர் அவ்வாறு சொன்னார்.

மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள KK Mart கடையில் விற்கப்படும் ham and cheese சன்விட்ச் ரொட்டிகளின் ஹலால் தன்மை குறித்து, மாணவர் அமைப்பொன்று  ஜனவரி 10-ஆம் தேதி வீடியோ வெளியிட்டு சந்தேகத்தை எழுப்பியது.

இதையடுத்து அந்த சன்விட்ச் ரொட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் சோதனைகள் நடத்தப்பட்டன.

அதே சமயம் சன்விட்ச் மாதிரிகள் சோதனைக்காக இரசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டன.

Ham என்பது ஆரம்பத்தில் பன்றி இறைச்சியில் செய்யப்பட்டதாகும்; எனவே கோழி மற்றும் வான்கோழி இறைச்சிகளில் செய்யப்பட்டிருந்தால் பொட்டலத்தில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதே, அதன் விற்பனையை எதிர்ப்பவர்களின் வாதமாகும்.

தற்போது இந்த ham and cheese சன்விட்ச் ரொட்டிகளில் பன்றி இறைச்சி கலக்கப்படவில்லை என உறுதியாகியிருப்பதால், சர்ச்சை முடிவுக்கு வருமென நம்புவோம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!