இந்தோனேசியா, அக்டோபர் 1 – இந்தோனேசியாவில், மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதற்காக, தந்தை ஒருவர் தனது சொந்த மகனைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவத்தில், தற்செயலாக அந்த தந்தையின் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து, பிரேக் உட்பட பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதற்காக 13 வயது மகனைக் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அந்த மகன் உயிரிழந்திருக்கிறார்.
இந்நிலையில், சாட்சியங்களின் வாக்கு மூலங்களைப் பெற்ற போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு, அந்த 44 வயது தந்தையை, கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.