
புத்ராஜெயா, ஏப்ரல்-16-மலேசியாவில் வசிக்கும் முஸ்லீம் அல்லாத தம்பதியிர் இனி தங்கள் திருமணத்தைப் பதிவுச் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
சிவில் திருமணப் பதிவுக்கான விண்ணப்பங்களை அவர்கள் இணையம் வாயிலாகவே சமர்ப்பிக்கலாம் எனத் தேசியப் பதிவிலாகாவான JPN அறிவித்துள்ளது.
21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியப் பிரஜைகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என, சிலாங்கூர் JPN கூறியது.
என்றாலும், விண்ணப்பிக்கும் இருவருமே மலேசியக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாகும்.
மற்ற நிபந்தனைகளில், விண்ணப்பதாரர்களின் தற்போதைய முகவரி, MyKad அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அதே மாவட்டத்தில் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தவிர, அரச மலேசிய ஆயுதப்படை அல்லது போலீஸ் படை வீரர்களாக அவர்கள் இருக்கக் கூடாது.
தகுதியுள்ள தம்பதியினர் ‘MyGovernment’ இணைய அக்கப்பக்கத்தில் கணக்கைத் தொடங்கி, JPN அமைப்பின் வழி விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அந்தப் படிவத்தை அச்சிட்டு JPN அலுவலகத்திற்குச் சென்று இறுதிப் பதிவு நடைமுறைகளை முடித்துக் கொள்ளலாம்.
அரசாங்கச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் இம்முயற்சி, பொது மக்களின் நேரத்தையும் அலைச்சலையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



