
சிங்கப்பூர், ஜூன் 4 – 20 வயதான சிங்கப்பூர் இளைஞர் ஒருவர் , இன்ஸ்டாகிராமில் ஒரு போலி வெடிகுண்டு மிரட்டலைப் பதிவிட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
டான் ஷி கை, ( Rykes Tan Zhi Kai,) என்ற அந்த இளைஞருக்கு பின்னர் தெரிவிக்கப்படும் தேதியில் நீதிமன்றத்தில் தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதியன்று சாங்கி விமான நிலையத்தில் ஒரு ஸ்கூட் போயிங் ட்ரீம்லைனர் விமானத்துடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றி, தான் இந்த விமானத்தில் குண்டு வைக்கப் போகிறேன் என்று டான் தலைப்பிட்டிருந்தார்.
இந்தச் செய்தியைப் ஒரு நகைச்சுவை என்று அவர் பின்னர் விவரித்தார். மேலும் அவர் தனது நண்பருக்கு, டான் ஷி கை, ரைக்ஸ் வெற்றிகரமாக விமானத்தில் குண்டு வைத்துவிட்டார், இனிமேல் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாது என்ற வரியுடன் பதிலளித்தார்.
இது தாம் இறந்துவிட்டதாகக் குறிக்கும் மற்றொரு நகைச்சுவை என்றும் அவர் கூறினார். அவரது பொய்யான மிரட்டல் காரணமாக நள்ளிரவு மணி 12.10 முதல் 1.50 மணிவரை புறப்படவிருந்த அனைத்து ஸ்கூட் டிரீம்லைனர் விமானங்களையும் பாதுகாப்புக் குழுக்கள் சோதனைக்காக அடையாளம் கண்டன. இந்தத் தாமதங்களின் விளைவாக, ஸ்கூட் நிறுவனத்திற்கு சுமார்
1,946 சிங்கப்பூர் வெள்ளி இழப்பு ஏற்பட்டது. போலீசிற்கு தகவல் கிடைத்த நேரத்தில், டான் ஏற்கனவே தனது மூன்று தோழர்களுடன் தைபே செல்லும் TR876 விமானத்தில் ஏறியிருந்தார்.
2025 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம்தேதியன்று சிங்கப்பூருக்குத் திரும்பியபோது டான் கைது செய்யப்பட்டார்.
இந்தக் குற்றத்திற்காக டானுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, 50,000 சிங்கப்பூர் வெள்ளிவரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



