Latestமலேசியா

கூலாயில் பரபரப்பு: எதிர்ப்புறப் பாதையில் அதிவேகமாகச் சென்ற Nissan GT-R சொகுசு கார்

கூலாய், ஜூலை-21 – ஜோகூர், கூலாய் அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஊதா நிற Nissan GT-R சொகுசு கார் ஒன்று, போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக எதிர்ப்புறப் பாதையில் ஆபத்தான முறையில் பயணித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று Jalan Johor Bahru-Air Hitam சாலையில், மற்ற வாகனமோட்டிகளின் dashcam கேமராவில் பதிவான இந்த வீடியோவில், அதிவேகப் பாதையில் வாகனங்கள் வந்து கொண்டிருக்கும் போதே, அந்தக் கார் சிறிதும் அச்சமின்றி எதிர்ப்புறமாக இயக்கிச் செல்லப்படுவது தெளிவாகத் தெரிகிறது.

நல்ல வேளையாக, எதிரே வந்த வாகனமோட்டிகள் உடனடியாகத் தங்களது வாகனங்களின் வேகத்தைக் குறைத்து சாதுரியமாக விலகிச் சென்றதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த ஆபத்தான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுச் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் மற்ற உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனமோட்டிய அந்தக் காரின் 33 வயது ஓட்டுநர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தை மீறியது உறுதிச் செய்யப்பட்டால், அவ்வாடவருக்கு 300 ரிங்கிட்டுக்கும் குறையாத 2,000 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்படலாம்.

சாலையைப் பயன்படுத்தும் அனைத்து வாகனமோட்டிகளும் போக்குவரத்து விதிகளைச் சரியாகப் பின்பற்றி, மற்றவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பொறுப்புடன் செயல்படுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!