Latestமலேசியா

இலக்கிடப்பட்ட மானியம்; T15 வரையறை ஆராயப்பவதாக பிரதமர் தகவல்

கோலாலம்பூர், அக்டோபர்-29, உயர் வருமானம் பெறும் T15 வர்கத்தினருக்கான வரையறையை அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

அவர்களுக்கான வருமான வரம்பை வெறும் 13,000 ரிங்கிட்டாக புள்ளி விவரத்துறை நிர்ணயித்திருப்பது மிகவும் குறைந்த அளவிலான ஒன்று.

இது தற்காலச் சூழலுக்கு ஏற்புடையதாக இல்லையென டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அரசாங்க உதவிகளுக்கு குடும்ப வருமானமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால், தகுதிப் பெற்ற எவரும் அதில் விடுபடாதிருப்பது முக்கியம்.

எனவே, T15 வர்கத்தினருக்கான குடும்ப வருமான வரம்பை சற்று உயர்த்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு, பொருளாதார அமைச்சு, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு உள்ளிட்ட தரப்புகள் அந்த கலந்தாய்வில் ஈடுபட்டுள்ளதாக அன்வார் சொன்னார்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட மானிய முறையின் கீழ், அரசாங்கம் T15 வர்கத்தினரை எப்படி வரையறுக்கப் போகிறது என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!