
பெட்டாலிங் ஜெயா, மார்ச்-8 – அங்காசாபூரி, ஆர்.டி.எம் வளாகத்தில் அமைந்துள்ள IPPTAR எனப்படும் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு – தகவல் கழகம், மார்ச் 3 முதல் ஐந்து நாள் நடிப்புப் பயிற்சி பட்டறையை நடத்தியது.
நடிப்புக்கான முக்கிய அம்சங்கள் மொழியாற்றல், வசன உச்சரிப்பு, தெளிவான பேச்சு, முகபாவனை ஆகியவை பற்றிய விளக்கம் இந்த பயிலரங்கில் வழங்கப்பட்டது.
நடிப்புத் துறையில் அனுபவம் பெற்ற பயிற்றுநர்கள் இந்த அடிப்படை நடிப்பு பயிற்சிப் பட்டறையை வழிநடத்தினார்கள்.
சில மண்ணின் மைந்தர்களும் இதில் கலந்துக் கொண்டனர்.
மலேசியத் திரைப்படங்கள், தொலைக்காட்சி- வானொலி நாடகங்களுக்குப் புதிய நடிகர்களை உருவாக்கி, நாட்டின் படைப்பாற்றல் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதே இதன் நோக்கமாகும் என ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சுமதி வடியப்பன் கூறினார்.
இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் இளம் உள்ளூர் கலைஞர்களை நன்கு பட்டைத் தீட்டுமென, நாட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான Dr விமலா பெருமாள் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தமிழ் மொழியில் நடத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறையில் 30 பேர் பங்கேற்றனர்.
அவர்களில் சிலர் தங்களின் அனுபவத்தை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.