நீலாய், டிசம்பர் 11 – மலேசியாவில் திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை கழகம் (SWCorp), 2023ஆம் ஆண்டில், 7 மாநிலங்களில் 2,634 சட்டவிரோத குப்பைக் கொட்டும் இடங்களை மூடியுள்ளது.
இந்த நடவடிக்கையில் 1,500 டன் குப்பை அகற்றப்பட்டு, RM412,000 ரிங்கிட் செலவிடப்பட்டது என மலேசிய குடியிருப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அமைச்சர் ங்கா கோர் மிங் (Nga Kor Ming) தெரிவித்துள்ளார்.
குடியிருப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, SWCorp நிறுவனம் மூலம் சுற்றுச்சூழல் மேலாண்மை பிரச்சனைகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு, சட்டவிரோத குப்பைத் தளங்களை மூடுவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இதில், 28 வழக்குகள் வெற்றி பெற்று, RM490,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இன்று நீலாயில் 180 டன் கட்டுமான மற்றும் மெகா கழிவுகள் அகற்றப்பட்டன.
இதுபோன்ற சட்டவிரோத குப்பைத் தளங்களை கண்காணிக்க, எதிர்கால நடவடிக்கைகளில் CCTV கண்காணிப்பு, SWCorp அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நடவடிக்கைகள் மலேசிய மடானி கொள்கைக்கு இணங்க, மக்களின் நலனுக்காக எடுக்கப்படுகின்றன.