
ஈப்போ, ஏப்-3-இவ்வாண்டில் மடானி மக்கள் (Program MADANI Rakyat (PMR) முதல் நிகழ்சி பேரா, ஈப்போவில் உள்ள மெரு ராயாவில் தொடங்கியது.
சுமார் 100,000 பார்வையாளர்களை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு மூன்று நாட்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
மக்களுக்கு பல்வேறு அரசு சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கான ஒரு தளத்தை இந்த நிகழ்ச்சி வழங்குவதால் நேரத்தையும் செலவுகளையும் குறைப்பதாக வீடமைப்பு மற்றும் ஊடாட்சித்துறை அமைச்சர் டத்தோ ஙா கோர் மிங் (Nga Kor Ming ) தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், விவேக நகர மேம்பாடு மற்றும் நிலையான சமூகங்கள் தொடர்பான கலந்துரையாடல் உட்பட, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், செயல் விளக்கங்கள் மூலம் விவேக நகரத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதும், சிறிய குறுகிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான ஹலால் சான்றிதழ் வழிகாட்டுதல்கள், அதன் மூலம் பரந்த சந்தை அணுகலை அவர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளையும் இந்த நிகழ்ச்சி வழங்குகிறது.
பார்வையாளர்கள் 30 விழுக்காடுவரை கழிவுடன் கூடிய ரஹ்மா விற்பனை, வேலை வாய்ப்பு கண்காட்சி, அத்துடன் இலவசமாக ஹெல்மெட் மாற்றுதல், மோட்டார் சைக்கிள் இயந்திர எண்ணெயை மாற்றிக்கொள்வது, சிகையலங்காரம் உட்பட இலவச சேவைகளையும் மக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



