Latestமலேசியா

காணாமல் போன 3 நாட்களுக்குப் பிறகு இரப்பர் தோட்டத்தில் இறந்துகிடந்த முதியவர்

பாலிங், ஏப்ரல்-22, கெடா, பாலிங்கில் 3 நாட்களாக காணாமல் போன முதியவர், உலு பூலாய், கம்போங் ச்சாருக் கெலியான் இரப்பர் தோட்டத்தில் இறந்துகிடந்தார்.

Eng Lee Mee எனும் 71 வயது அவ்வாடவரின் சடலம், நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது.

அவர் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாமென தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, பாலிங் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் அஸ்மி மொக்தார் கூறினார்.

சடலத்தை, அம்முதியவர் மகன் அடையாளம் காட்டினார்.

பெரோடுவா அக்சியா காரை எடுத்துகொண்டு தனியாக வெளியே கிளம்பிய தந்தையை வெள்ளிக்கிழமை முதலே காணவில்லை என மகன் ஏற்கனவே போலீஸிலும் புகார் செய்திருந்தார்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், முதுமையில் வரும் ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் தந்தைக்கு இருந்ததாகவும் அவர் சொன்னார்.

சம்பவ இடத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை; அவரின் உடமைகளும் காணாமல் போகவில்லை என போலீஸ் கூறியது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!