ஈப்போ, அக்டோபர்-14 – ஈப்போவில் உள்ள தேசியப் பள்ளியொன்றில் 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததன் பேரில், பள்ளிப் புறப்பாட துணைத் தலைமையாசிரியர் கைதாகியுள்ளார்.
சனிக்கிழமை காலை 3 மணிக்கு கைதான 37 வயது அவ்வாடவர் விசாரணைகளுக்காக 6 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவியை கட்டியணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்ததாக சந்தேக நபருக்கு எதிராக 47 வயது தாய் வெள்ளிக்கிழமை போலீஸ் புகார் செய்தார்.
மாணவியின் கைப்பேசிக்கு அவ்வாடவர் ஆபாச படத்தை அனுப்பியதும் கண்டறியப்பட்டது.
கடந்த 8 மாதங்களாக அப்பள்ளியில் வேலை செய்து வரும் அந்த பிரமச்சாரி ஆசிரியர், ஏற்கனவே பல முறை அம்மாணவியிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாக, பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் (Datuk Azizi Mat Aris) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கல்வி அமைச்சு அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதை, கல்வி துணையமைச்சர் வோங் கா வோ முன்னதாக உறுதிபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.