
அலோர் காஜா, மே 20 – பெண் ஈ-ஹெய்லிங் ஓட்டுநரின் கழுத்தை இறுக்கி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட 14 முதல் 17 வயதுக்கிடைப்பட்ட 4 இளைஞர்கள் இன்று அலோர் காஜா நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
குற்றச்சாட்டின் படி, குவாலா சுங்கை பாரு (Kuala Sungai Baru) அருகே மே 4 ஆம் தேதியன்று, 42 வயதுடைய லிம் லீ யின் (Lim Lih Yin) என்பவரை இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆபத்தான பொருளால் தாக்கி, கழுத்தை இறுக்கி காயப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மலேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் சுமார் 1,000 ரிங்கிட் ஜாமீன் விதித்து, ஜூன் 24 ஆம் தேதியன்று வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது.



