
பெங்களூரு, ஜூலை-4 – இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மனைவியின் உடல் எடை மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக அவரை கணவர் கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பிரச்னைகள் இருந்து வந்துள்ளன.
குறிப்பாக, கணவர் தனது 29 வயது மனைவியின் உடல் எடைக் குறித்து அடிக்கடி கேலி செய்தும், அவமானப்படுத்தியும் வந்துள்ளார்.
அத்துடன் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் துன்புறுத்தல்கள் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியைக் கொலைச் செய்துள்ளார்.
இது குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் மனைவியைக் கொலைச் செய்ததாகக் கூறி அந்த நபர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.



