
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – நான்காம் வகுப்பு தமிழ்ப்பள்ளி மாணவர்களைப் புதிய ‘Matriks Pembelajaran Tahun 4’ (MPT4) தேர்வு முறைக்குத் தயார்படுத்தும் சிறப்புக் கருத்தரங்கு, அண்மையில் செர்டாங்கில் உள்ள Universiti Putra Malaysia (UPM)-ல் வெற்றிகரமாக நடைபெற்றது.
ITC Edu Ventures Sdn. Bhd. ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், சிலாங்கூர் முழுவதும் 22 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 260 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற கருத்தரங்கில், Bahasa Melayu, English, Mathematics மற்றும் Science ஆகிய நான்கு முக்கிய பாடங்களில் புதிய MPT4 தேர்வு வடிவத்தை எதிர்கொள்வது குறித்து அனுபவமிக்க ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழிகாட்டப்பட்டது.
புதிய தேர்வு முறையைப் புரிந்துகொள்வதுடன், முக்கிய பாடங்களில் தங்களை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் கருத்தரங்கின் மூலம் மாணவர்கள் பெற்றனர்.
கல்வி அமைச்சின் புதிய MPT4 தேர்வு முறைக்கு மாணவர்களை முன்கூட்டியே தயார்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக ITC Edu Ventures Sdn. Bhd. இயக்குநர் Soloman Santhiaboo தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற கருத்தரங்குகள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைவதாக Universiti Putra Malaysia, Faculty of Modern Languages and Communication பேராசிரியர் YBhg. Professor Dr. Vijayaletchumy A/P Subramaniam தெரிவித்தார்.
இதனிடையே, இதுபோன்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்த ITC Edu Ventures Sdn. Bhd. நிறுவனத்திற்கு ஹுலு லங்காட் மாவட்ட தலைமையாசிரியர் மன்றத்தின் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் தலைவர் Neduchelian Kuppusamy.
நெகிரி செம்பிலானில் சுமார் 130 தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் தொடங்கிய MPT4 கருத்தரங்கு, தற்போது சிலாங்கூரில் 260 மாணவர்களைச் சென்றடைந்துள்ளது.
அடுத்தகட்டமாக செப்டம்பர் 12ஆம் தேதி ஜோகூர் மாநிலத்திலும் MPT4 கருத்தரங்கு நடைபெறவுள்ளது.



