Latestமலேசியா

போட்டியோடு முடிந்துவிடக் கூடாது; KPKT-யின் பணிக் கலாச்சாரமாக புதுமை மாற வேண்டும் — ஙா கோர் மிங்

மக்களுக்கான அரசாங்கச் சேவைகளை இன்னும் விரைவாகவும் தரமாகவும் வழங்க, புதிய தொழில்நுட்பங்களுடன் பணியாற்றும் அணுகுமுறையிலும் புதுமை தேவைப்படுகிறது.

அந்த நோக்கில், புதுமையை வெறும் போட்டியாகக் கருதாமல், ஊழியர்களின் அன்றாடப் பணிக் கலாச்சாரமாக மாற்ற வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சான KPKT முனைகிறது.

புத்ராஜெயாவில் நடைபெற்ற KPKT புதுமை தினம் 2026-இல் பேசிய அமைச்சர் ஙா கோர் மிங், புதிய யோசனைகள் மக்களுக்குப் பயனளிக்கும் நடைமுறை மாற்றங்களாக அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அமைச்சின் செயல்திறனை மேம்படுத்துவதுடன் மக்களுக்கு சிறந்த, விரைவான சேவைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மொத்தம் 54 புதுமைத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 43 புதுமை மற்றும் ஆக்கப்பூர்வக் குழுத் திட்டங்களும், 11 அமைச்சரின் புதுமை விருதுக்கான திட்டங்களும் இடம்பெற்றன. ஒன்பது பிரிவுகளில் மொத்தம் 30,400 ரிங்கிட் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விருதுகளைப் பெறுவதோடு புதுமையின் பயணம் முடிந்துவிடக் கூடாது; அரசாங்கப் பணிகளையும் மக்களுக்கான சேவைகளையும் மேம்படுத்துவதே அதன் உண்மையான வெற்றி என அமைச்சர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!