Latestஉலகம்

உத்தரபிரதேசத்தில் தூங்கப் போன பெண் படுக்கையில் பாம்புத் தோலாக கண்டெடுப்பு: ‘நாகினியா’ என மக்கள் அச்சம்

உத்தரபிரதேசத்தில் தூங்கப் போன பெண் படுக்கையில் பாம்புத் தோலாக கண்டெடுப்பு: ‘நாகினியா’ என மக்கள் அச்சம்

அனுரையா, பிப்ரவரி-11,

இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் 20 வயது இளம்பெண் திடீரென காணாமல் போன சம்பவம், ஒரு கிராமத்தையே அதிர வைத்துள்ளது

ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கச் சென்ற அப்பெண் அப்படியே மாயமானார்; ஆனால் படுக்கைக் கலையவில்லை..

ஆடைகள், நகைகளும் அப்படியே இருந்தன; ஆனால் அவர் படுத்திருந்த இடத்தில் 5 அடி நீள பாம்பு தோல் கிடந்ததால் குடும்பம் பதறிபோனது.

இதனால் அப்பெண் சினிமாவில் பார்ப்பது போல் ‘நாகினியாக’ மாறி மறைந்து விட்டதாக, கிராம முழுவதும் மூடநம்பிக்கையுடன் கூடிய அச்சமும் வதந்திகளும் காட்டுத் தீயாய் பரவின.

போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கிய பெண்ணைத் தேடிய போதே உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபனை காதலித்து வந்த அப்பெண், அவனுடன் வீட்டை வீட்டு ஓடுவதற்கு நடத்தியதே இந்த ‘நாகினி’நாடகம் என அம்பலமானது.

மூடநம்பிக்கையால் பரவிய வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப் புள்ளி வைத்த போலீஸார், தற்போது அப்பெண்ணையும் காதலனையும் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!