லக்னோவ், நவம்பர்-16, இந்தியா, உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
மருத்துவமனையின் சிசு பராமரிப்புப் பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்குத் திடீரென தீ ஏற்பட்டது.
தகவலறிந்து மாவட்ட தீயணைப்பு வண்டியும் இராணுவ தீயணைப்பு வாகனமும் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
ஆனால் தீயில் கருகியும் கரும்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென தொடக்கக் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அவ்விபத்து குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்த உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர், மீட்புப்பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடி விசாரணை நடத்தி 12 மணி நேரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.