Latestமலேசியா

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட STPM தேர்வு – கல்வி அமைச்சர் பட்லினா சிடெக்

நிபோங் தெபால், மே 28 – மலேசிய கல்விச் சான்றிதழுக்குப் (SPM) பிறகு, மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடர, உலகளவிலிருக்கும் 2000-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களின் அங்கீகாரம் பெற்ற, படிவம் ஆறு (STPM) முக்கியத் தேர்வாக இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடெக் (Fadhlina Sidek) கூறியுள்ளார்.

மலேசிய கல்வி ப்ளூபிரிண்ட் 2013 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான திட்டங்களில், படிவம் 6-இன் (STPM) மறுபெயரிடுதலும் ஒன்றாகுமென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்விக்கான தொடர்ச்சி மற்றும் சமத்துவ அணுகலை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் 2025 முதல், ஆறாம் படிவ மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளி உதவி (BAP) தொகை வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இது பெரும் உதவியாக இருக்குமென்று பட்லினா குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டம் 2029 வரை தொடருமென்றும், அதன் மொத்த செலவு 2.9 மில்லியன் ரிங்கிட் என்றும், துன் ஷெட் ஷே பராக்பா {SMK Tun Syed Sheh Barakbah} இடைநிலைப்பள்ளியின் உதவித்தொகைத் திறப்பு விழாவிற்கு வருகைப்புரிந்த கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!